மூன்றாம் உலக போர் இன்று (05) அல்லது நாளை (06) தொடங்கும் என இந்தியாவின் (India) பிரபல ஜோதிடராக அறியப்படும் குஷால் குமார் (Kushal Kumar) தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
புதுடெல்லி (New Delhi) இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபடும் குஷால் குமார், இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர் அத்தோடு இதற்கு முன் ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர்.
இந்தநிலையில், இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்த இவர் இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற நிகழ்வுகள் ஏற்படமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில் இந்த போர்கள், ஆபிரிக்கா (Africa) போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.
இந்த நிலையில், மூன்றாம் போர் தொடக்கம் பற்றிய திகதியை குஷால் அறிவித்து உள்ள நிலையில் அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் (Iran) தலைவர் அலி காமினி (Ali Khamenei ) உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் மூன்றாம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
- இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.
- அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்