• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்த குழந்தை!

Aug 4, 2024

யாழ்ப்பாணம் (Jaffna) அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா தொடர்பில் மாநகர சபை விஷேட அறிவிப்பு!

சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்.

இதனையடுத்து குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

ஆடி பெருக்கு அன்று வீட்டில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்?

இந்தநிலையில், குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக இன்று (04) நடைபெறும் உடல் கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது

உடல் கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) வைக்கப்பட்டுள்ள நிலையில்  தெல்லிப்பழை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed