• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்புடன்.

Aug 4, 2024

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று (04) ஆடி அமாவாசை தினத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற அவ்வாலயத்தின் மாமாங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கின்ற நிலையில் இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தர்களின் அரோகரா என்ற கோசங்கள் முழங்க தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா தொடர்பில் மாநகர சபை விஷேட அறிவிப்பு!

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவ ஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் கிரியைகள் இடம்பெற்றன.

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்.

வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து வெளிவீதி வலம் வந்து இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக் கொண்ட பெருமையினையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

யாழில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்த குழந்தை!

மேலும், அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தணிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக் கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed