ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.அன்றைய நாளில் நாம் வீட்டில் இருந்து எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்று பார்க்கலாம்.
வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்.
ஆடி பெருக்கில் வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்ந்துஎடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்து,அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன்முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!
ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று பெண்கள் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைக்க வேண்டும்.
பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், சூரிய பகவானையும் வணங்க வேண்டும்.
யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு.
பிறகு வீட்டில உள்ள வயது முதிர்ந்த சுமங்கலி பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்தவேண்டும்.அதன்பிறகு, அந்த பெண் தனது வீட்டு சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்.
அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!
புனித நதிக்கரைகளுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் போட்டு நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது.
அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம்.
ஆகையால் குபேரனையும், மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.