• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில்  பகுதியில் விபத்து. மூவர் வைத்தியசாலையில் .

Aug. 2, 2024

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு !

இந்த விபத்து பட்டக்காடு வயல்வெளிக்கு அருகில் உள்ள பகுதியில் இன்றையதினம் (02-08-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நாயையும், குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு!

மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் சென்ற பிரிதொரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்டவேளை எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் முன் கண்ணாடியில் விரிசல்! தரையிறங்கிய சுவிஸ் விமானம்.

இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed