கேரளா(Kerala) வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று(30) அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
4 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் –
140 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 168-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவால் உருகுலைந்த வயநாடு! பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.
ஒரே குடும்பம்
கடற்படையும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது. இதேவேளை, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.