• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் நீரில் மூழ்கி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.

Juli 28, 2024

இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா.

இச் சம்பவங்கள் நேற்றையதினம் (27-07-2024) இடம்பெற்றுள்ளன.

இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உருகுடா வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறைக்கப்படும் பாடசாலை தரங்களின் எண்ணிக்கை; 

இதனையடுத்து, எஹட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிகம, மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed