• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 3 பேரின் சடலங்கள் மீட்பு!

Jul 28, 2024

Valais கன்டோனில் உள்ள Vétroz நகராட்சியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப்பின்னர், இரண்டு வீடுகளில் இருந்து மூன்று சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2 பேர் இறந்து கிடந்தனர் என்றும், மற்றொரு நபர் மற்றொரு குடியிருப்பு கட்டடத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிசார் X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணி அல்லது கூடுதல் மேலதிக தகவல்கள் குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

நகராட்சியில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதையடுத்து பொலிசார தீவிர நடவடிக்கையில் இறங்கினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தின் ஊடாக உள்ள பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று காலை 8 மணியளவில் தபாலக கட்டடத்தில் 6 , 7 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

55 வயதுடைய நபர் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்து ஆண் ஒருவரையும், பெண் ஒருவரையும் சுட்டுக் கொன்று விட்டு பின்னர் தனது வீட்டில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார் என்று பிந்திய தகவல்கள் கூறுகின்றன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed