• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா !

Jul 28, 2024

ஐபோனுக்காக 8 வயது தங்கையிடம் சண்டையிட்டு, அவளை கழுத்தை நெரித்துக் கொன்ற 12 வயது அக்காவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோர்களுடன் கோடை விடுமுறைக்காக சிறுமிகள் 2 சென்றுள்ளனர்.

ஒருவரின் வயது 12, மற்றொருவரின் வயது 8. இந்நிலையில் ஐபோன் தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த 12 வயது சிறுமி தனது தங்கை தூங்கும்போது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மேலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குற்றத்தை மறைக்க தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உயிரிழந்த சிறுமி டெமரியா ஹோலிங்ஸ்வொர்த் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து பெற்றோரின் புகாரின் பேரில் பொலிஸார் விரைந்து வந்து சிறுமியை கைது செய்தனர்.

கொலை மற்றும் சாட்சியங்களை அழித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் சிறுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed