• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகியுள்ள சூரி படம்.

Jul 28, 2024

சூரி நடித்துள்ள அடுத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரே இல்லை என்று அந்த படத்தை இயக்குனர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுவிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 3 பேரின் சடலங்கள் மீட்பு!

ஒரு திரைப்படம் என்றால் இசை என்பது மிகவும் முக்கியம் என்பதும் இசையமைப்பாளர் தான் பல திரைப்படங்களை உயிரூட்டி உள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சூரி நடித்து வரும் ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

புயல் வேகத்தில் மாஸ் காட்டும் நடிகர் சிம்பு.

இந்த படத்தில் இசையமைப்பாளரே இல்லை என்றும், லைவ் சவுண்ட் வைத்து முழுவதும் படத்தை எடுத்து உள்ளோம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் தெரிவித்துள்ளார். ’கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் உள்ள மண் சார்ந்த ஒரு வார்த்தை என்றும் இந்த கதையில் சேவல் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக படங்களை பார்த்து தான் என் சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன் என்றும் ஒரு சில உலகப்படத்தில் லைவ் சவுண்ட் வைத்து படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் அதேபோல் நாமும் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணம் தான் ’கொட்டுக்காளி’ படம் என்றும் எனவேதான் இந்த படத்தில் இசையமைப்பாளர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளரே இல்லாமல் லவ் லைவ் சவுண்ட் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ’கொட்டுக்காளி’ படம் நிச்சயம் ஆடியன்ஸ்களுக்கு ஒரே மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed