வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆடி வெள்ளியில் அம்மன் அருள் பெற!
இராம பிரான் வழிபட்ட ஆலயம்
இந்த நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இராம பிரான் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும், மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்பவற்றை ஓருங்கே கொண்ட ஆலயம் என்ற பெருமையினையும் கொண்டது.
மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயம் ஆகும். இந்நிலையில் மகோற்சப பெருவிழாவை முன்னிட்டு நேற்றையதினம் மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய இராசிபலன்கள் (26.07.2024)
வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முரசொலிமாறன் குருக்களினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு கொடி மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.
யாழில் கனேடிய வாழ் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்! பெண்ணொருவர் கைது
வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள்.
தொடர்ந்து மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியுடாக கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பார் வீதியினூடாக ஆலயத்தினை வந்தடைந்தது.
இன்று நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளதுடன், வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை ஆலயத்தின் சித்திரத்தேர் உற்சவமும் 04ஆம் திகதி பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.