கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தனது மகளால் கைவிடப்பட்ட இந்த தாய் தற்போது கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டில் தங்கியுள்ளார்
அத்தோடு தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு பொலிஸ் மற்றும் சமூக சேவை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மகள் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீதியில் இறக்கிவிட்டு சென்றதாகவும்,
கல்வி அறிவு இல்லாததால்ல் தன்னை எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதை அறியமுடிவில்லை என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது தனது கணவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும், தானும் தனது மகளும் கலிகமுவ பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் கூலி வேலை செய்தும், விறகு விற்றும் மகளை உயர்கல்வி கற்பித்ததாகவும், திருமணமான பின்னர் தன்னை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இறக்கும் வரை தங்கியிருக்க இடமொன்றினை பெற்றுத்தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்
- இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
- ஏழரை சனி பெயரச்சியால் கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிகள்
- இன்றைய இராசிபலன்கள் (22.11.2024)
- யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை!2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு