இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
தனுஷே இயக்கி, நடித்த அவரது 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட மூஞ்சு, ராயன் ரம்பல் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் தனுஷ் ராயன் படத்தை தானே இயக்கி, அதில் நடித்தும் உள்ளார். அவரது 50வது படம் என்பதால் ரசிகர்களால் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் இரண்டு வேலைகளை செய்துள்ள நடிகர் தனுஷ் இப்படத்திற்காக ரூ. 45 முதல் ரூ. 50 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
- இன்றைய இராசிபலன்கள் (02.04.2025)
- 5 ஆம் ஆண்டு நினைவு. தம்பிராசா இராசசிங்கம்,(02.04.2025,சிறுப்பிட்டி , நல்லுர்)
- ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்
- முச்சக்கரவண்டி கட்டண தொடர்பான அறிவிப்பு
- இந்த நகரத்தில் குடியேறினால் பணமும் வீடும் இலவசம்! இத்தாலி