• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோட் படத்தின் பின்னணி இசைப் பணிகளைத் தொடங்கிய யுவன்!

Juli 26, 2024

விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ராயன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து  வரும் நிலையில் படத்துக்கான பின்னணி இசையமைப்பு வேலைகளை யுவன் தற்போது தொடங்கியுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed