• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு

Jul 25, 2024

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்துமே விசேஷமானவை தான். அதிலும் ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி திதி அதிக விசேஷமானதாகும். பஞ்சமி திதி என்றாலே அது வாராஹி அம்மனுக்கு உரியதாகும்.

சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும் நபர் ஒருவர் படுகொலை!

வாராஹி அம்மன், பார்ப்பதற்கு உக்கிரமான ரூபம் கொண்டிருந்தாலும், தாயை போல் இளகிய மனம் கொண்டு, கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை தந்து அருளக் கூடியவள். காவல் தெய்வமாக இருக்கும் வாராஹி, சப்த கன்னியர்களில் ஒருவராகவும், அம்பிகையின் போர் படை தளபதியாகவும் இருக்கக் கூடியவள்.

ஜூலை 25ம் திகதி வரும் ஆடி மாத தேய்பிறை பஞ்சமி இன்று வாராஹிக்கு எளிமையான முறையில் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு | Theipirai Panchami Varahi Amman Valipadu Today
ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்கும் சீனா.

ஜூலை 25ம் திகதி காலை 08.41 மணிக்கு துவங்கி, ஜூலை 26ம் திகதி காலை 06.10 வரை பஞ்சமி திதி உள்ளது. இதனால் இந்த நேரத்தில் வீட்டில் வாராஹியை வழிபடுவதால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, செல்வங்கள் பெருகும்.

தேய்பிறை பஞ்சமி அன்று மாலை, வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் கைப்பிடி அளவிற்கு கல் உப்பினை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது ஒரு செம்பருத்தி இலையை வைத்து, ஒரு சிறிய அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, வாராஹி படத்திற்கு முன் தீபம் ஏற்ற வேண்டும்.

இன்றைய இராசிபலன்கள் (25.07.2024)

வாராஹி படம் இல்லா விட்டால் அந்த தீபத்தையே வாராஹி அம்மனாக பாவித்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது உங்களின் கோரிக்கை அல்லது வேண்டுதல் எதுவோ அதை அந்த தீபத்தின் சுடரை பார்த்து சொல்லுங்கள். இந்த விளக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

வாராஹி நிலத்திற்குரிய தெய்வம் என்பதால் பூமிக்கு அடியில் விளையும் எந்த பொருளை வேண்டுமானாலும் வாராஹிக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். அதிலும் கிழங்கு, வாராஹிக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். பழங்களில் மாதுளம் பழமும் வாராஹிக்கு விருப்பமானதாகும்.

புதிய தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்!

மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து, அதோடு தேன் கலந்து நைவேத்தியமாக படைக்கலாம். பிறகு அவற்றை பிரசாதமாக அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு கொடுப்பது சிறப்பு.

ஆடி மாத தேய்பிறை பஞ்சமியில் வாராஹிக்கு இப்படி விளக்கேற்றி வழிபட்டால் கஷ்டங்கள் காணாமல் போகும். வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

நகையை திருடியவரை பிடித்த பொலிஸ்காரரை வெட்டிய திருடன்.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed