• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நகையை திருடியவரை பிடித்த பொலிஸ்காரரை வெட்டிய திருடன்.

Juli 24, 2024

கதிர்காமம் வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண்ணொருவரின் தங்க நகையை  திருடிய  சந்தேக நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை  பிளேட்டால்  வெட்டியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.  

காயமடைந்த கான்ஸ்டபிள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

காயமடைந்தவர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பதுடன் கதிர்காமம் விகாரையின் பெரஹரா நிகழ்வின் போது குறித்த கான்ஸ்டபிள்  கடமையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.  

வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண் ஒருவரிடமிருந்து தங்க நகையை சந்தேகநபர் திருடிச் செல்வதைக் கண்ட கான்ஸ்டபிள்,  சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, சந்தேக நபர் கையிலிருந்த பிளேட்டால் கான்ஸ்டபிளின் இடது கையை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed