யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமார்ந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது தெஹிவளையில் வசித்து வரும் நபரொருவரை 40 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)