• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

Jul 22, 2024

இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த 9 மாதங்களாக தொடரும் இந்த போரில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன.

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் !

ஆனால் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பாலஸ்தீனம் அருகே நூசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த ஈலா அட்னன் ஹர்ப் என்ற கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை காசா மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததையடுத்து தற்போது நலமுடன் உள்ளது. நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed