• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2026 தேர்தல்.. அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த்.

Juli 21, 2024

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் பிரஷாந்த். இவரை ரசிகர்கள் டாப் ஸ்டார் என கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

அந்தகன், GOAT என தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரஷாந்த், GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

கண்பார்வை போச்சு சிம்பு பட நடிகைக்கு

இதில் அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் GOAT செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் பிரஷாந்திடம் 2026 தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த பிரஷாந்த் „2026 தேர்தலில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து பிறகு பேசலாம். 2026 தேர்தலை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செயப்பவர்களுக்கே எனது ஆதரவு“ என கூறியுள்ளார்.

2026 தேர்தல்.. அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த் | Prashanth About 2026 Tamilnadu Election

2026 தேர்தல் குறித்து நடிகர் பிரஷாந்த் பேசியுள்ள இந்த விஷயம் தற்போது சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed