ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார்.
2026 தேர்தல்.. அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த்.
அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது. தீவிர தலைவலியால் அவதிப்பட்டதால் பீமா பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்து இளைஞனை கொழும்பில் காணவில்லை.
அவரின் தலையை சிடி ஸ்கேன் மூலம் ஆராய்ந்ததில் மண்டை ஓட்டின் உள்ளே பல ஊசிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 22 ஊசிகள் வரை இருக்குமென்று கணித்த மருத்துவர்கள் அதில் 8 ஊசிகளை எடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வலி மேலும் தீவிரமடைந்ததால் அவரை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழன் (ஜூலை 18) அன்று சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கனடாவில் அதிர்ச்சி! சூட்கேஸில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
அங்கு நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அவரது மண்டை ஓட்டிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நேற்று நரம்பியல் நிபுணர்களால் மீண்டும் நடந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மேலும் 7 ஊசிகள் அகற்றப்பட்டன.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சூனியம் செய்வதாகக் கூறி ரேஷ்மாவின் தலையில் ஊசிகளை செலுத்திய நபரான சாமியார்தேஜ்ராஜ் ராணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்
- பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்.
- கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது
- இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்