• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பருத்தித்துறையில் கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை.

Juli 20, 2024

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து! 30 பேர் படுகாயம்

வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 04 கடற்தொழிலாளர்களும் கடந்த 07ஆம் திகதி ஒரு படகில் கடற்தொழிலுக்கு சென்று இருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை பொலிஸார் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ள நிலையில் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் மற்றுமொரு சர்வதேச விமான நிலையம்!

தொழிலுக்கு சென்ற நால்வரும் 05 தினங்களுக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் 12 நாட்களாக கரை திரும்பவில்லை என பருத்தித்துறை போலிஸ் நிலையத்தில் கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed