• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். நெடுந்தீவு கடலில் சிசுவை பிரசவித்த தாய்.

Juli 19, 2024

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் புதன்கிழமை (17.07.2024) பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவருகின்றது. 

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இன்றைய இராசிபலன்கள் (19.07.2024)

படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவ மாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். 

அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார். 

யாழில் கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு.

தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். 

தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed