• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு.

Juli 19, 2024

முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இன்றைய இராசிபலன்கள் (19.07.2024)

யாழ்ப்பாணம் – காரைநகர் , களபூமி பகுதியைச் சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73)  என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிப்பதற்கு சென்ற போது, முட்கிளுவை மரத்தின் முள்ளு காலில் குத்தியுள்ளது. 

அதனால் ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி)

முள்ளு குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உட்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed