• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான தகவல்.

Jul 19, 2024

கனடாவில் (Canada) எதிர்வரும் மாதங்களில் வீடுகளின் விலைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆடி மாதம் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளின் மகிமை.

குறித்த தகவலை கனேடிய வீட்டுமனை சந்தை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

கனடாவில் வீட்டு அடகுக் கடன் தொகை வெகுவாக அதிகரித்துச் செல்வதால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவான வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில்  ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த இந்தியா சுற்றுலாக் கப்பல்!

இந்த நிலையில், கடந்த ஒரு தசாப்த காலத்தில் பதிவாகாத அளவிற்கு தற்பொழுது வீட்டு விற்பனை குறித்த பட்டியல்களில் பல வீடுகள் விற்பனைக்காக பட்டியலிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீடுகளுக்கான நிரம்பல் அதிகரிக்கும் நிலையில் வீட்டு விலைகளில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என வீட்டுமனை சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு!

அடகுக் கடன் தொகை அதிகரிப்பினை சமாளிக்க முடியாத காரணத்தினால் வீடுகள் இவ்வாறு விற்பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed