• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆடிப்பிறப்பு தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை

Jul 17, 2024

பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது.

உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல் பன்முக வளர்ச்சியைப் பெற்று வருகின்ற காலத்தில் பண்பாடு தான் தனி மனிதனை சமூகமயமாக்கும் சாதனமாகவும் விளங்குகிறது.

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்.

ஈழத் தமிழர்களின் பண்பாடு சைவத்தோடும் தமிழோடும் இயற்கை நெறியோடும் கலந்தது. அத்தகைய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் ஆடிப்பிறப்பு (17.07.2024) இன்றாகும்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை: மனிதர்கள் வாழலாம் என தகவல் 

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

எனத் துவங்கும் நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பாடல் தமிழ் ஈழச் சமூகத்தில் இரண்டக் கலந்த வாழ்வியல் பாடலாகும்.

ஆடிப்பிறப்பு நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள் தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.

இந்த முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள் வெளித்துக் கிடக்கும் காட்சிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளாக பார்த்து வருகின்றோம்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும்.

பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.

இந்த காலம் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கை சார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.

தமிழ் நாட்டில் ஆடிப்பிறப்பு

தமிழகத்தில், இந்தநாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இந்த உணவு வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்கு பற்றும் இந்த நாளை ‚ஆடிப்பெருக்கு‘ என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள்.

தற்காலத்திலும் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. “ஆடி விதை தேடி விதை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி ஆவணி ஆன புரட்டாதி காடி தோய்த்த கனபனங் காயத்தைத் தேடித் தேடித் தினமும் புசிப்பவர் ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்” இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை… என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார்.

ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாகஆடிப்பிறப்பு அமைந்துள்ளது.

அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியது என்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.

கற்கடகம் என்பது ஆடி மாத்தின் பழைய தமிழ் பெயராகும். ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் விழாவே ஆடிப்பிறப்பு. இப் பண்டிகையின் போது தேங்காய் சுடுதல் என்ற உணவுப் பழக்கமும் தமிழர்களிடம் காலம் காலமாக நிலவிவந்துள்ளது.

ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள்

தேங்காய் நாரை முற்றிலும் உரித்துவிட்டு நன்றாக உருட்டியபின், தேங்காயின் 3முகங்களில் ஒன்றில் மட்டும் துளையிட்டு தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும்.

சிப்பருப்புடன், பொட்டுக்கடலை, எள்ளு, வெல்லம், சிறிதளவு உப்பிட்டு அரைத்தெடுத்து. தேங்காயின் ஒரு துவாரத்தின் வழியாக அடைத்து சிறிது தேங்காய் நீரை ஊற்றியபின் இதுவாரத்தை மஞ்சளிட்டு அடைத்து வாதனங் குச்சியை துவாரத்தில் சொருகி தேங்காயை தீயில் சுட்டபின் கடவுளுக்கு படைத்தபின் உடைத்து குடும்பத்துடன் சாப்பிடும் வழக்கம்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது.

சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்புகாணப்படுகிறது. அத்தடன் ஈழக் கவிஞர் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed