யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளனர்.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!
வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களையும் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மோதி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் நிறை போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் , வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டி வந்ததாகவும், அவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தே , முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி தள்ளி விட்டு தப்பி சென்றதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி வித்தகன், வைஸ்னவி தம்பதிகள். (16.07.2024, கனடா)
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற மோட்டார் சைக்கிளை இனம் கண்டுள்ளதாகவும் , விபத்தினை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)
- மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
- பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு
- ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறக்க அனுமதி