• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இசை நிகழ்ச்சி – குழப்பம் விளைவித்தவர் கைது.

Juli 13, 2024

யாழில் இடம்பெற்ற  இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில்  தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொண்ட  இசைநிகழ்வு நேற்றையதினம்(12) இரவு யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றது.

தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ் ரம்யா, ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள்  குறித்த இசைநிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இசைநிகழ்வு இடம்பெற்ற வேளை நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இசை நிகழ்ச்சியில் மோதல் ஒருவர உயிரிழப்பு

வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த மோதலில்  வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  5 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்  தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை மோசமான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed