• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் காணி ஒன்றில் இருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு

Juli 12, 2024

யாழ். (jaffna) கொடிகாமம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்!

இந்த வெடிபொருட்கள் யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காணி உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக காவல்துறையினருக்கு விடயத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் நெப்போலியனின் மருமகள் யார் தெரியுமா?

இந்நிலையில் கொடிகாமம் (Kodikamam) காவல்துறையினரோடு இணைந்து விசேட அதிரடிப்படையினரும் அவ் இடத்திற்கு விரைந்து றம்மை எடுத்த போது அதற்குள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.

இவற்றில் 8 மகசின்கள், 2 கைக்குண்டுகள், 3 மிதி வெடிகள் மற்றும் சுமார் 1000 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed