• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்!

Juli 12, 2024

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – பூநகரி (Poonakary) 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இன்று (12) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவிக்கு (Mallavi) சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு  (CTB) சொந்தமான பேருந்தில் சாவகச்சேரி பகுதியில் இருந்து குறித்த ஆசிரியர் ஏறியுள்ளார்.

பேருந்து பூநகரி பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய ஆசிரியர் பேருந்தின் பின்கதவுப் பகுதியால் கீழே விழுந்துள்ளார்.

இந்த நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த ஆசிரியர் சாவகச்சேரி ஆதாார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

இதேவேளை வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவேளை திருமுறுகண்டியில் நேற்று  (11) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed