• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி

Jul 12, 2024

கனடாவில் (Canada) தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது!

சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் அமர்ந்திருந்த வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும் துப்பாக்கி சன்னங்களின் காயங்கள் காணப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ரொரன்ரோ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed