கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாண நபரொருவர் நேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஜினியுடன் இந்த படத்தில் ஏண்டா நடிச்சோம்னு இருந்தது. நடிகை குஷ்பூ
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்!
சந்தேகநபர் நேறறிரவு 09-07-2024) இந்தியாவிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரின் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்
- இன்றைய இராசிபலன்கள் (10.07.2024)
- சாரம் தாக்கி இளம் தாய் மரணம்!
இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தரகர் ஒருவரிடம் 90 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து, இந்த போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)