யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு கணபதிசாமி குருக்கள் இயற்கை எய்தியுள்ளார்.
இவர் தனது 76ஆவது வயதில் இன்று (9) காலை 10:00 மணியளவில் காலமானார்.
யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பிரதம குருவாக கணபதிசாமி குருக்கள் இறை பணியாற்றியுள்ளார்.
அத்துடன், இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும், சிவன் கோவிலடி, ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்டவர் ஆவார்.
விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் ஜோடி!
இந்நிலையில், இறுதிக்கிரியைகள் அவரின் சொந்த இடமான சிவன் கோவிலடி, ஆவரங்காலில் நாளை காலை 9:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை, அவரது மூன்று பிள்ளைகளும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குருவானவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கிளிநொச்சி விபத்தில் சிக்கிய இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!
- ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி
- தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!