பிரித்தானியாவில் (British) வாழும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் மகிழ்வடையும் வகையில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன் (Uma Kumaran) ஸ்ராட்போட் அன்ட் பௌவ் (Stratford and Bow) தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை
பிரித்தானியாவில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.
அதன் படி, இது அந்த தொகுதியில் கிட்டிய வாக்குகளில் 44.1 வீதமாகும்.

இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.
ஈழத்தமிழ் வேட்பாளர்கள்
இதேவேளை, இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீக வேட்பாளரான கிறிஷ்னி ரிசிகரன் லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவருக்கு 8,430 வாக்குகள் கிட்டியுள்ளன.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு முதல் பிரிஸ்டல் மேற்குத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இன்னொரு ஈழத்தமிழர் சார்பு முகமான தங்கம் டெபோனைர், பசுமைக்கட்சியிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.அவருக்கு 14,132 வாக்குகள் கிட்டியுள்ளன.
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)
- மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
- பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு
- ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறக்க அனுமதி