காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பொலிஸாரால் இன்று (5) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் காணாமல்போனதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இன்று (05) தோண்டியபோதே குறிப்பிட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- வெதுப்பக உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !
- பாரவூர்தி கவிழ்ந்து கோர விபத்து; நால்வர் பலி!
பின்னர், அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண் காணாமல்போனதாக அவரது குடும்பத்தினரால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தியதை அடுத்து, கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்த கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எங்கு இருக்கிறது கைலாசா நாடு? நித்தியானந்தா அறிவிப்பு.
தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதியும், அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும், கடந்த மே மாதம் இருவரும் மட்டக்களப்புக்கு சென்று வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர், யுவதியுடன் தொடர்பற்றுப் போயிருந்ததாகவும் அந்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரித்தானியாவில் காலநிலை மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- ஆற்றில் கவிழ்ந்த வாகனம் !சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
- யாழ் நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை!
- சுவிஸ் சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனிப்பொழிவு !
- சனி – ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி