• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

Jul 4, 2024

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் வேனுயன் தவம் (04.07.2024, லண்டன்)

விலைக் குறைப்பு

 உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை இவ்வாறு  குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வைத்தியசாலையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்!

இதன்படி,  மொத்தக் கொள்வனவின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவின் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை  215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்தக் கொள்வனவின் போது சிவப்பு பருப்பு கிலோ ஒன்றுக்கு 14 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலை 282 ரூபாவாகும்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் !

அத்தோடு, வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 269 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed