• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ.

Juli 2, 2024

2024 – யூரோ கிண்ணம் கால்பந்து தொடரின் போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்தில் அவர் கண்ணீர் விட்ட காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழில் முதியவரை கொலை! குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது!

யூரோ கிண்ணம் 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரின் ஆரம்ப சுற்றுப்போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதி வரை சென்றிருக்கிறது.

இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை!

இந்நிலையில், 16ஆவது சுற்றுப்போட்டியில் நேற்று(01) போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின.

மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ | Ronaldo Shed Tears On The Filed

வெளிநாட்டு வேலைவாய்ப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

போட்டியில் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, முதல் பெனால்டியை போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்க முயன்றபோது அம்முயற்சி அவருக்கு தோல்வியைக் கொடுத்தது அதனால் அக்கணமே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட்டில் போர்த்துகல் கோல்கீப்பர் டியாகோ கோஸ்டா ஸ்லோவேனியா வீரர்களான ஜோசப் இலிசிச், ஜியூர் பால்கோவெச், மற்றும் பெஞ்சமின் வெர்பிக் ஆகியோர் ஷாட்களைத் தடுக்க போர்த்துகல் 3-0 என்று வெற்றி பெற்று யூரோ காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed