• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்று முதல் விலை குறைக்கப்பட்ட எரிபொருள்!

Juni 30, 2024

இன்று -30- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி!

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து!
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 379 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed