• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்த இளைஞர்கள்

Juni 28, 2024

வவுனியா வீதியால் சென்ற பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

1வது திருமணநாள் வாழ்த்து,கவின் சுதேதிகா (28.06.2024)

குறித்த சம்பவம் வவுனியா, கோயில் குளம் பகுதியில் (28-06-2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கோவில் குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஒரு பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed