• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பாம்பு தீண்டியதில் 3 பிள்ளைகளின் தாய் மரணம்!

Juni 28, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில், பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார்.

பேரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொடுக்குளாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை பாடப்புத்தங்களில் இடம்பிடித்த தமன்னா; பெற்றோர் திகைப்பு!

சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப் பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும், சம்பவ இடத்திலையே குறித்த தாய் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

இந்நிலையில் உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed