• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலை பாடப்புத்தங்களில் இடம்பிடித்த தமன்னா; பெற்றோர் திகைப்பு!

Juni 28, 2024

இந்தியா – கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 7ஆம் தரப் பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் உள்வாங்கப்பட்டுள்ளது.

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்! பாராட்டு விழாவில் விஜய்

இந்நிலையில் நடிகை தமன்னா பற்றிய பாடத்திற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறித்த பாடப் புத்தகத்தில் சிந்தி மொழி பேசும் மக்களின் கலாசாரத்தை விளக்கும் வகையிலான பாடம் இணைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

அதில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், தமன்னா பற்றிய பாடம் தொடர்பாகப் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முறையான பதில் கிடைக்காமையினால், பாடசாலையின் அதிபரைச் சந்தித்து விளக்கம் கேட்ட நிலையில் நிர்வாகத்தின் தரப்பிலிருந்து சரியான விளக்கம் வழங்கப்படவில்லை.

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர் கர்நாடக கல்விப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ள அதேவேளை சில பெற்றோர், தமன்னா பற்றிய பாடத்தை நீக்காவிட்டால் குறித்த தனியார் பாடசாலையிலிருந்து தங்களது பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றப் போவதாக எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed