• Sa.. Mai 24th, 2025 9:16:28 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை மரணம்!

Juni 27, 2024

 யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த பிரவீன் அக்ஷரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

சூரிச்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

குழந்தை நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு  சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed