• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் ஆலயம் ஒன்றில் பெருந்தொகை நகை திருட்டு!

Juni 26, 2024

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை களவாடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே இவ்வாரு திருட்டுப்போயுள்ளன. சந்தேக நபர்கள் போலி திறப்புக்களை பயன்படுத்தி பூட்டை திறந்து பொருட்களை திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஆலயத்தில் பெரும் தொகை நகை மற்றும் பணம் களவுபோன சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed