• Mo.. Apr. 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் திடீர் நில நடுக்கம்

Juni 19, 2024

வவுனியாவில் திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் புதிய வகை நோய்த்தொற்று!

வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது, ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்

இந்த நில அதிர்வு வவுனியா மக்களாலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed