• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்.

Juni 17, 2024

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்த நிலையில் பயணித்த பயணிகளிடையே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்ற விமானத்திலேயே இவ்வாறு தீ பற்றிக் கொண்டது.இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமான இயந்திரத்தில் திடீரென தீ பற்றியது. இதனால், விமானத்தில் ஒரு இயந்திரம் முழுவதும் செயல் இழந்தது.

இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன் இயந்திரம் மீது பறவைகள் மோதியதாலேயே தீ பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed