• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.

Jun 16, 2024

தேனி மாவட்டத்தில் இரண்டு வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்! –

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் – தமிழ்ச்செல்வி தம்பதிக்கு லத்திகா ஸ்ரீ என்ற இரண்டு வயது பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

உடலில் பச்சை குத்திக்கொள்வதால் உருவாகும் புற்றுநோய்! அதிர்ச்சி தகவல்

 இந்த நிலையில் திடீரென இரண்டு வயது பெண் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி அழுததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 400க்கும் அதிகமாக உள்ளது என்றும் உடனடியாக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
கனடாவில் நூதன மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

இதனை அடுத்து தேனி மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பொதுவாக 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வரும் நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed