• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மங்கோலியாவில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி

Jun 13, 2024

மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்)

வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும்.

யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்!

இந்தநிலையில் மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதன் காரணமாக மங்கோலியா நாடு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை பனிப்புயலுக்கு சேதமடைந்தன. இதனால் அங்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு பொருள் தட்டுப்பாட்டால் மங்கோலியாவில் 70 இலட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed