குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்!
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ குடியிருப்பு முழுவதும் பரவியதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முயன்றனர். இருப்பினும் தீ விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி சித்தியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது.
குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!
இந்நிலையில் தீ விபத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 40 பேர் இந்தியர்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் அங்கு இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து இந்திய தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்.
குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
- ஏழரை சனி பெயரச்சியால் கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிகள்
- இன்றைய இராசிபலன்கள் (22.11.2024)
- யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை!2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
- வவுனியா பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு!