ஜேர்மனின்(Germany) பிராங்பர்ட் விமான நிலையத்தில் கட்டுமான பணிக்காக பணியாளர்கள் நிலத்தை தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்
இந்நிலையில் உடனடியாக நான்கு ஓடுபாதைகளும், ஒரு நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பெருந்தொகை கடன்
இதன்போது அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனால், விமானங்கள் புறப்பாடு முதலான விடயங்களில் தாமதம் ஏற்படலாம் என எக்ஸ் தளத்தில் அறிவித்த விமான நிலைய அதிகாரிகள், விமான நிலையத்துக்கு புறப்படும் முன், அது குறித்து விசாரித்து அறிந்துவிட்டு அதற்கேற்ப விமான நிலையம் வருமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் பலி!
இதன் பின்னர், நேற்று இரவு அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, அதைத் தொடர்ந்து A5 நெடுஞ்சாலையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டுகள் ஜேர்மனியில் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளதோடு அவை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- யாழில் தடுப்பூசி போடப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு
- இன்று அதிகாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
- சனிப்பெயர்ச்சியால் தங்கம் வாங்கும் யோகம் பெற்றவர்கள் ?
- இன்றைய இராசிபலன்கள் (31.03.2025)
- டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை