மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வெள்ளைக்காரர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நேத்திக்கடனை நிறைவேற்றிய சம்பவம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள்
மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கடந்த புதன்கிழமை (5)அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர் வீதியுலாவும் நடைபெற்றது. அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் மகிமையினையும் கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் விளங்கி வருகின்றது.
ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகை தந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்ட நிலையில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
- 2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள்
- யாழ் நகரில் நகைக் கடை ஒன்றில் கொள்ளை!
- கிளிநொச்சியில் விபத்து. 2 வயது சிறுமி உயிரிழப்பு.தாய்,தந்தை,மகன் படுகாயம்!
- கஜகஸ்தானில் விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு.
- யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!