• Mi.. Jan. 22nd, 2025 8:59:23 PM

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Juni 7, 2024

யாழ்ப்பாணம்  ஏழாலை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகமொன்றினை நடாத்திய உரிமையாருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி யசோ தீபன் (07.06.2024, சிறுப்பிட்டி)

ஏழாலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில், சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கி வந்த நிலையில், அதன் உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நல்லூர் கந்தன் பெருவிழா! யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட காளாஞ்சி

குறித்த வழக்கு நேற்றைய தினம் (06.06.2024) வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்தது.

அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு!

அதேவேளை, கடந்த வாரம் சுன்னாகம் பகுதியில் உள்ள உணவகமொன்றில் காலாவதியான மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்த கூடிய, உண்பதற்கு ஒவ்வாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உரிமையாளருக்கு 83 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed